சேலம் மாவட்டத்தில் 975 பேருக்கு தொற்று :  கரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால் மக்கள் ஏமாற்றம்

சேலம் மாவட்டத்தில் 975 பேருக்கு தொற்று : கரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால் மக்கள் ஏமாற்றம்

Published on

சேலம் மாவட்டத்தில் நேற்று 975 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனிடையே கரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால், தடுப்பூசி மையங்களுக்கு வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

சேலம் மாவட்டத்தில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் நேற்று முன்தினம் வரை 5 லட்சத்து 17ஆயிரத்து 675 டோஸ்கள் போடப்பட்டுள்ளன. இந்நிலையில், மாவட்டத்தின் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றில் தடுப்பூசி இருப்பு இல்லாததால், தடுப்பூசி மையங்களுக்கு நேற்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதனிடையே, சேலம் மாவட்டத்தில் நேற்று 975 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதில், சேலம் மாநகராட்சி பகுதியில் 228 பேரும், நகராட்சி பகுதியில் ஆத்தூரில் 8, மேட்டூரில் 33, எடப்பாடியில் 2, வட்டார அளவில் எடப்பாடியில் 53, சேலத்தில் 55, மேச்சேரியில் 46, நங்கவள்ளியில் 44, ஓமலூர், வீரபாண்டியில் தலா 40, ஆத்தூரில் 30, சங்ககிரி, பனமரத்துப்பட்டியில் தலா 22, தாரமங்கலம், பெத்த நாயக்கன்பாளையம், தலைவாசலில் தலா 17, வாழப்பாடியில் 15. கொங்கணாபுரத்தில் 14, காடையாம்பட்டியில் 12, மகுடஞ்சாவடியில் 9, அயோத்தியாப்பட்டணத்தில் 7, கெங்கவல்லியில் 8 மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வந்த 223 பேர் என மாவட்டம் முழுவதும் 975 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in