தென்காசி எஸ்பி பொறுப்பேற்பு :

கிருஷ்ணராஜ்
கிருஷ்ணராஜ்
Updated on
1 min read

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சுகுணாசிங் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப் பாளராக நியமிக்கப்பட்டார். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கிருஷ்ண ராஜ் நியமிக்கப்பட்டார். அவர், நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, ‘மக்களைத் தேடி காவல்துறை’ திட்டத்தை தொடங்கிவைத்தார். மேலும், காவல் துறையினருக்கு கபசுர குடிநீர் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “தற்போது ஊரடங்கு காரணமாக குற்றங்கள் குறைந்துள்ளன.

மக்களைத் தேடி காவல்துறை திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் தொடர்பாக, அவர்களது இருப்பிடத்துக்கே சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொள்வர். மாவட்டம் முழு வதும் தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப் படும்.

புகார்கள் குறித்து காவல் நிலையங்களில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் 93856 78039 என்ற தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் புகார் செய்யலாம். ஊரில் நடக்கும் பிற பிரச்சினைகள் குறித்தும் தகவல் தெரிவிக்கலாம். விசாரணை எவ்வித சமரசமும் இன்றி நேர்மையான முறையில் நடைபெற நடவடிக்கை எடுக்கப் படும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in