தி.மலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் :

திருவண்ணாமலை அண்ணா சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர். அடுத்த படம்: தமிழகத்துக்கு மக்கள் தொகை அடிப்படையில் கரோனா தடுப்பூசி வழங்க வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் தலைமை தபால் நிலையம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்.

Updated on
1 min read

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும், செங்கல் பட்டில் உள்ள ஆய்வு மையத்தை தமிழக அரசிடம் ஒப்படைத்து கரோனா தடுப்பூசி தயாரிக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவண்ணா மலையில் 3 இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தி.மலை நகரம் திருவள்ளுவர் சிலை, காமராஜர் சிலை அருகே நகரச் செயலாளர் ஞானவேல் தலைமையிலும் மற்றும் அண்ணா சிலை முன்பு வட்டச் செயலாளர் ஆறுமுகம் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது “பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்தும், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண் டும், செங்கல்பட்டில் உள்ள ஆய்வு மையத்தில் தடுப்பூசி தயாரிக்க அனுமதி வழங்க வேண்டும்” என முழக்கமிட்டனர். இதில், மாவட்டச் செயலாளர் முத்தை யன், மாவட்டத் துணைச் செயலாளர் தங்கராஜ், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் ஜோதி, மாவட்டக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஏஐடியுசி தொழிற்சங்க மாவட்டத் துணைச் செயலாளர் விஸ்வநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in