முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் பயன்பெற - கரோனா நோயாளிக்கு உதவிய சிறப்பு அதிகாரி :

முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் பயன்பெற -  கரோனா நோயாளிக்கு உதவிய சிறப்பு அதிகாரி :
Updated on
1 min read

கரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் கூடுதல் கட்டணம் கேட்டதாக வந்த புகாரின்பேரில் முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் பயன்பெற சிறப்பு அதிகாரி உதவினார்.

கோவை தென்னமநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கவிதா. கரோனாவால் பாதிக்கப்பட்டு, கடந்த மே 24-ம் தேதி திருச்சிசாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். சிகிச்சைக்கான செலவுரூ.2.50 லட்சம் வரை ஆகும் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். பின்னர், சிகிச்சைக்காக ரூ.2.60 லட்சம் கட்டியுள்ளனர். இதுதவிர, கூடுதலாக ரூ.3.09 லட்சம் கேட்டுள்ளனர். அந்த பணத்தை கட்டினால்மட்டுமே கவிதாவை வீட்டுக்கு அனுப்புவோம் என்று உறவி னர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக கவிதாவின் மகள் கோமதி, கோவை மாவட்ட கரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரியான எம்.ஏ.சித்திக்கை தொடர்புகொண்டு தெரிவித் துள்ளார். நோயாளிக்கு முதல்வரின் காப்பீட்டு திட்ட அட்டை இருக்கிறதா என்பதை கேட்டறிந்த சித்திக்,காப்பீட்டு திட்ட அலுவலரை தொடர்புகொண்டு தெரிவித்துள் ளார். பின்னர், தேவையான ஆவ ணங்கள் பெறப்பட்டு, காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சைக்கான செலவை ஏற்றுக்கொள்ள உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மற்றொரு புகார்

முதல்நாள் சிகிச்சை கட்டணமாக ரூ.60 ஆயிரம் வசூலித்த மருத்துவ மனை நிர்வாகம், சிகிச்சை பெறும் ஒவ்வொரு நாட்களுக்கும் ரூ.40 ஆயிரம் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

ஆனால், அடுத்தடுத்த நாட்களில் அதிக கட்டணம் பெற்றுள்ளனர். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிகமாக வசூலிக்கபட்டது தொடர்பாக மோகன்குமாரின் சகோதரர் மகாலிங்கம் கோவை மாவட்ட ஆட்சியரிடம் நேற்று மனு அளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in