சசிகலா அதிமுக உறுப்பினராக முடியாது : முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கருத்து

விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகிறார்.
விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகிறார்.
Updated on
1 min read

விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நேற்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எங்கள் ஆட்சி மீது மிகப்பெரிய குற்றச்சாட்டை வைத்தார். கடந்த அதிமுக ஆட்சியில் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் எம்ஏ வரலாறு பாடத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் மீது தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். அப்படி இருப்பது தவறுதான். இது 2005-ம் ஆண்டு எழுதப்பட்டதாக சொல்லப்பட்டது. அப்போது நான்தான் கல்வித்துறை அமைச்சர். 2006-ம் ஆண்டு திமுக ஆட்சியில் இவர் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது என்ன செய்தார்? அவர் சார்ந்த கட்சி மீது சொன்னதை ஏற்றுக்கொண்டாரா? அதன்பின் 5 ஆண்டுகள் சட்டமன்றத்தில் என்ன செய்தார்?

விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்ட 100 நோயாளிகளில் 5 பேரைக்கூட மருத்துவமனையில் அனுமதிப்பதில்லை. 80 சதவீத நோயாளிகளை வீட்டிலே தனிமைப்படுத்திக்கொள்ள சொல்கிறார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உரிய படுக்கைவசதி, உணவு வசதி வழங்கப்பட வில்லை என்று தகவல்கள் வருகிறது. இறந்தவர்களின் சடலத்தை தூக்கி வீசுவது வருத்தமளிக்கிறது. கரோனா தேசிய பேரிடர் சட்டம் 2005-ன் படி மத்தியஅரசு குறைந்தப்பட்சம் ரூ.4 லட்சம்நிதி வழங்க வேண்டும். கரோனாவில் இறந்தார் என்று இறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும்.

வீட்டில் சிகிச்சைபெறும் 80சதவீத நோயாளிகளில் இறப்பவர்கள் கணக்கில் காட்டுவதில்லை. இறப்பை மறைக்காமல் உண் மையை தெளிவுபடுத்துங்கள்.

கருவாடு மீனாகலாம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிமுக ஆட்சி யில் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்குப் பின்பு ரூ.200 கோடிக்கான பணிகளையும் நிறுத்தவேண்டும் என திட்ட அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மக்களுக்கான வளர்ச்சிப் பணிகளை தொடர் வதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும்.

30 நாள் ஆட்சியை பற்றி ஆங்கில நாளிதழ் ஒன்றில் 3 நாட்களுக்கு முன்பு வெளியான செய்தி யில் சுகாதார, போக்குவரத்து, மின்சாரத்துறை அமைச்சர்கள் தான்துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது என்று எழுதப்பட்டுள்ளது. மற்ற அமைச்சர்கள் தன் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவே முதல்வரின் அனுமதி வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதுதான் இந்த ஆட்சியின் நிலை. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in