

விருத்தாசலத்தில் அனைத்து கடைகளும் நேற்று திறக்கப்பட்டதால் பொருட்களை வாங்க மக்கள் கூட்டமாக திரண்டனர்.
தமிழகத்தில் நேற்று முதல் தளர்வுகளுடன் ஊரடங்குஅறிவிக்கப்பட்டது. இதையடுத்துநேற்று விருத்தாசலத்தில் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் செல்போன் கடைகள், ஜவுளி கடைகள் திறக்கப்பட்டதால் அங்கும் மக்கள் திரளாகச் செல்லதொடங்கினர்.
இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் வட்டாட்சியர் சிவக்குமார், விதிமுறைகளை மீறி திறக்கப்பட்டிருந்த செல் போன் மற்றும் ஜவுளி கடைகள் என 5 கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து நகராட்சி அலுவலர்கள் 5 கடைகளுக்கும் நேற்று சீல் வைத்தனர்.