நிதிநிறுவனத்தில் இன்வெர்ட்டர் பேட்டரிகள் திருட்டு :

நிதிநிறுவனத்தில் இன்வெர்ட்டர் பேட்டரிகள் திருட்டு :
Updated on
1 min read

தஞ்சாவூர் அருகே கண்டியூர் பிரதான சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தின் மாடியில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு வீடு அடமான கடன், மோட்டார் வாகனக் கடன், மகளிர் குழு கடன் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

கரோனா ஊரடங்கையொட்டி, மே 25-ம் தேதி இந்த நிதிநிறு வனத்தில் இருந்த ரூ.67 ஆயி ரம் பணத்தை எடுத்து வேறு வங்கியில் டெபாசிட் செய்து விட்டு, நிறுவனத்தை அலுவலர் கள் பூட்டிச் சென்று விட்டனர்.

இந்நிலையில், நிதி நிறுவன கிளை மேலாளர் ஜவகர், உதவிமேலாளர் கர்கல்ராஜ் ஆகிய இருவரும் நேற்று வந்து பார்த்தபோது, நிதி நிறு வனத்தின் ஷட்டர் பூட்டு உடைக் கப்பட்டு, உள்ளே இருந்த லாக்கர் திறக்கப்பட்டிருந்தது. மேலும், அங்கிருந்த சிசிடிவி கேமராக்களும் உடைக்கப்பட்டு கிடந்தன. நிதி நிறுவனத்தில் திருட வந்தவர்கள், லாக்கரில் பணம் ஏதுமில்லாததால், அங்கிருந்த 2 இன்வெர்ட்டர் பேட்டரிகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், திருவையாறு டிஎஸ்பி சுபாஷ் சந்திரபோஸ், இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீ ஸார் நிதிநிறுவனத்தை பார்வை யிட்டனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in