

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் கரோனா தொற்று பாதிப்பு குறித்து கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுவோருக்கான ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. நகராட்சி ஆணையர் ஸ்டான்லிபாபு தலைமை வகித்துப் பேசியதாவது:
நோய் தொற்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவோர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வீடு, வீடாகச் சென்று கணக் கெடுப்பு நடத்த வேண்டும். நோய் பாதிப்பு குறித்து குறிப்பு எடுத்துக்கொண்டு சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இதன்பேரில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நேரடி ஆய்வு செய்து நோய் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்வர். அனை வரும் கவனத்துடன் பணிபுரிந்து கரோனா இல்லாத நகராட்சியாக மாற்ற வேண்டும், என்றார்.