

திருநெல்வேலி மாவட்ட பள்ளிக் கல்வித்துறை, தேசிய பசுமைப்படை சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது. சுற்றுச்சுழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் எஸ்.கணேசன் வரவேற்று பேசினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மு.சிவகுமார் தலைமை வகித்தார். திருநெல்வேலி வன பாதுகாப்பு படை உதவி வன பாதுகாவலர் ஹேமலதா சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி சிறப்புரையாற்றினார். திருநெல்வேலி கல்வி மாவட்ட தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் ஏ.செல்வின் சாமுவேல், பி.எம்.டி.கல்லூரி பேராசிரியர் கொம்பையா ஆகியோர் கருத்துரையாற்றினர். சங்கர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் உ.கணேசன், நாங்குநேரி அரசு மேல்நிலைப் பள்ளி தேசிய பசுமைப் படை திட்ட அலுவலர் ஜெயசிந்தி ஆகி யோர் பள்ளி செயல்பாடுகள் குறித்து பேசினர். சங்கர் மேல் நிலைப் பள்ளி தேசிய பசுமைப் படை திட்ட அலுவலர் கோ.கணபதி சுப்பிரமணியன் நன்றி கூறினார்.