தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் - கரோனா தொற்று விவரங்களை பொதுமக்கள் அறிய ஏற்பாடு :

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் -  கரோனா தொற்று விவரங்களை பொதுமக்கள் அறிய  ஏற்பாடு :
Updated on
1 min read

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சரண்யாஅறி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரோனா பெருந்தொற்று அறிகுறிகள் தொடர்பான சந்தேகங்கள், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் விற்பனை செய்யும் வியாபாரிகள் தொடர்பான புகார்கள் , நிர்ணயம் செய்த விலையை விட அதிக விலைக்கு பொருட்களை விற்பவர்கள் மற்றும் மாநகராட்சி அனுமதி இன்றி விற்பனை செய்யும் வியாபாரிகள் தொடர்பாக புகார் செய்ய தூத்துக்குடி மாநகராட்சியின் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை எண் 0461-2326901-ஐ தொடர்பு கொள்ளலாம் அல்லது வாட்ஸ் அப் புகார் எண் 7397731065-ல் பதிவு செய்யலாம்.

தடுப்பூசி முகாம் குறித்த விவரம் மற்றும் தடுப்பூசி போடப்பட்ட விபரங்களை பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமுக வளைதளங்களில் நாள்தோறும் பொதுமக்கள் வசதிக்காக பதிவேற்றம் செய்யப்படுகிறது. கரோனா தொற்று ஏற்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள் தங்களது சந்தேகங்கள், மருத்துவ உதவிகள் மற்றும் ஆலோசனைகளுக்கு தூத்துக்குடி மாநகராட்சி கரோனா கட்டுப்பாட்டு அறையை தொலைபேசி எண் 0461-4227202 மற்றும் செல்போன் எண் 6383755245 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in