

வடக்கு மண்டல ஐஜியாக சந்தோஷ் குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழக காவல் துறையில் வடக்கு மண்டல ஐஜியாக இருந்த சங்கர், கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று பணியிட மாறுதல் செய்யப்பட்டார். இதையடுத்து, சேலம் மாநகர காவல் ஆணையர் சந்தோஷ்குமார், வடக்கு மண்டல ஐஜி பணியை கூடுதலாக கவனித்து வந்தார். இதற் கிடையில், சேலம் மாநகர ஆணை யராக நஜ்மல் ஹோடா நியமிக்கப் பட்ட நிலையில் வடக்கு மண்டல ஐஜியாக சந்தோஷ்குமார் மாற்றம் செய்யப்பட்டார்.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தி.மலை, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், திருவள் ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்கு மண்டல ஐஜியாக சந்தோஷ்குமார் நேற்றுமுன்தினம் மாலை பொறுப்பேற் றுக்கொண்டார். அவருக்கு. வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட சரக டிஐஜிக்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.