ஊரடங்கு விதியை மீறி இறுதி ஊர்வலம் 100 பேர் மீது வழக்கு :

ஊரடங்கு விதியை மீறி இறுதி ஊர்வலம் 100 பேர் மீது வழக்கு :
Updated on
1 min read

திருப்பூர் மத்திய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தென்னம்பாளையம் உழவர் சந்தை பின்புறம் உள்ள ஏபிடி சாலையில், பழைய துணிகளை பிரிக்கும் வேஸ்ட் குடோனில் கடந்த 2-ம் தேதி இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

இதுதொடர்பாக மத்திய போலீஸார் விசாரித்ததில், எம்.ஜி.ஆர். காலனியைச் சேர்ந்த சம்சுதீன் (23) என்பது தெரியவந்தது. இந்நிலையில், சம்சுதீனின் சடலத்தை எஸ்ஏபி திரையரங்கம் அருகே முஸ்லிம்களின் அடக்க ஸ்தலத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்த இறுதி ஊர்வல வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, தளர்வுகளற்ற ஊரடங்கு விதிகளை மீறி ஏராளமானோர் இறுதி ஊர்வலத்தில் சென்றது தொடர்பாக, சுமார் 100 பேர் மீது திருப்பூர் வடக்கு மற்றும் அனுப்பர்பாளையம் போலீஸார் வழக்கு பதிந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in