கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் - மத்திய வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் நகல் எரிப்பு போராட்டம் :

கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் -  மத்திய வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் நகல் எரிப்பு போராட்டம் :
Updated on
1 min read

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் கடலூரில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், இலவச மின்சாரத்தை பறிக்கும் மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும், விவசாய விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க ஏற்பாடு செய்யக்கோரியும் அகிலஇந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நகல் எரிப்பு போராட்டம் அறிவிக் கப்பட்டிருந்தது.

அதன்படி நேற்று கடலூர் ஜவான் பவன் அருகில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. அகில இந்திய விவசாயிகள் போராட்டம் ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட அமைப்பாளர் மாதவன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் மாநில செயலாளர் வழக் கறிஞர் சந்திரசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்புராயன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை செயலாளர் ஸ்ரீதர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிமாநில குழு உறுப்பினர் குளோப் உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் சிதம்பரம், காட்டு மன்னார்கோவில், பண்ருட்டி, விருத்தாசலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. மேலும் கடலூர் மாவட்டம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வீடுகளில் கோலம் போடும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டிருந்தது.

கள்ளக்குறிச்சி

மத்திய அரசு அரசின் 3 புதிய வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெறக்கோரியும்,அதனை கண்டித்தும் கச்சிராயப்பாளை யத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி கஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதேபோன்று வெள்ளிமலை பகுதியில் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க நிர்வாகி சின்னச்சாமி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத் தில் கிருஷ்ணன், பூங்காவனம், சடையன், கிருஷ்ணமூர்த்தி, செந்தில்குமார் உள்ளிட்டோர் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in