

உலக சுற்றுச்சூழல் தினத்தை யொட்டி தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
திருச்சி பெல் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மரக்கன் றுகளை நட்டு வைத்து சுற்றுச்சூழல் உறுதிமொழியை வாசித்து பெல் நிறுவன பொது மேலாளர் மற்றும் தலைவர் டி.எஸ்.முரளி பேசியது:
தற்போதைய பெருந்தொற்றுச் சூழலில் ஆக்சிஜன் உருவாக்கும் மரங்கள் இன்றியமையாதவை என்பதை நமக்கு புரிய வைத்துள் ளன. இயற்கையோடு அமைதி காக்க வேண்டிய தலைமுறையாக இருப்பதால், நாம் அதிக மரங் களை வளர்க்க வேண்டும் என்றார்.
திருச்சி தேசிய கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை யொட்டி எஸ்.பி மயில்வாகனன், ரயில்வே எஸ்.பி செந்தில்குமார் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். கல்லூரி முதல்வர் ஆர்.சுந்தரராமன், துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி, பேராசிரியர் குணசீலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கரூரில்...
பெரம்பலூரில்...
திருவாரூரில்...
திருத்துறைப்பூண்டி வட்டம் ஆதிரெங்கம் நெல்ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, கிரீன்நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு தலைமையில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இதை எம்எல்ஏ க.மாரிமுத்து தொடங்கி வைத்தார்.
நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் வர வேற்றார். ஆதிரங்கம் ஊராட்சித் தலைவர் வீரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.