

சிஐடியூ திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் ஆர்.மோகன், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர்.
இவர்களில் 800-க்கும் மேற்பட்டவர்கள் நிரந்தரப் பணி யாளர்கள். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒப்பந்த பணியாளர்கள். ஒப்பந்த பணியாளர்களில் 1,500-க்கும் மேற் பட்டவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
கரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகள், பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திலும் 50 சதவீத தொழிலாளர்களை மட்டும் வைத்து பணி செய்ய வேண்டும் என்று, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ஆனால், அரசுத்துறையான கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் இந்த உத்தரவை மீறி, 100 சதவீத தொழிலாளர்களை பணியில் அமர்த்தியிருக்கிறது.
இதனால், இதுவரையிலும் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 3 ஒப்பந்த தொழிலாளர்கள் உயிரி ழந்துள்ளனர்.
இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டு ள்ளது. 50 சதவீத தொழிலாளர்களை மட்டும் பணியில் அமர்த்தி, அணுமின் நிலையத்தை இயக்க உத்தரவிட வேண்டும். ஆனால், தொழிலாளர்கள் அனைவருக்கும் முழுமையான ஊதியம் வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.