

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் உழவுபணி மேற்கொள்ள வாடகை யின்றி டிராக்டர்களை பயன்படுத் திக்கொள்ள முன்பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட வேளாண் இணை இயக்குநர் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,‘‘வேளாண் பொருட்கள் கொள் முதல் சந்தைப்படுத்துதல் மற்றும் விவசாயம் பயன்பாட்டுக்கான எந்திரங்களின் புழக்கம் போன்ற நடவடிக்கைகளுக்கு ஊரடங்கு காலத்தில் தளர்வு அளிக்கப் பட்டுள்ளது.
தமிழக அரசு டாபே நிறுவ னத்தின் ஜெ பார்ம் ஆகியவை இணைந்து மாஸே பெர்குசன், ஐஷர் டிராக்டர்கள் மற்றும் வேளாண் இயந்திரங்களை மாவட்டத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு உழவு பணிகளை மேற்கொள்வதற்காக 60 நாட்களுக்கு வாடகையின்றி இலவசமாக உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
விவசாயிகள் இந்த சேவையை பெற உழவன் செயலியில் உள்ள வேளாண் எந்திர வாடகை சேவை மூலமாகவோ அல்லது டாபே நிறுவ னத்தின் ஜெ பார்ம் சேவை மையத்தில் 18004200100 என்ற இலவச தொலைபேசி எண்ணிலோ அல்லது மாநில ஒருங்கிணைப் பாளரின் 95006-91658 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான வேளாண் இயந்திரங்களை தேவைப்படும் தேதி மற்றும் நேரத்தை குறிப்பிட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளார்.