அவிநாசி அருகே ஏ.கே.வி.என். சாரிட்டி சார்பில் கோவிட் கேர் மருத்துவமனை திறப்பு  :

அவிநாசி அருகே ஏ.கே.வி.என். சாரிட்டி சார்பில் கோவிட் கேர் மருத்துவமனை திறப்பு :

Published on

திருப்பூர்: அவிநாசி அருகே தெக்கலூர் என்.ஜி.பாளையம் பிரிவு அருகே ஏ.கே.வி.என். சாரிட்டி மருத்துவமனையின் கோவிட் கேர் மையம் நேற்று திறக்கப்பட்டது.

ஆக்சிஜன் உற்பத்தி வசதி மற்றும் 80 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. திருப்பூர் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில், செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்துவைத்தார். சிறப்பு விருந்தினராக திருப்பூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் க.செல்வராஜ் பங்கேற்றார். ஏ.கே.வி.என். சாரிட்டி மருத்துவமனை நிர்வாக இயக்குநர்கள் டி.கே.சந்திரன் அன்ட் பிரதர்ஸ், ஏ.கே.வி.என். மருத்துவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். தி சென்னை சில்க்ஸ், குமரன் தங்க மாளிகை மற்றும் எஸ்சிஎம் குரூப் நிறுவனங்களின் ஏ.கே.வி.என். சாரிட்டி சார்பில், அனைத்து வசதிகளுடன் இந்த கோவிட் கேர் மருத்துவமனை ரூ.4 கோடி மதிப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது. 

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in