செல்லம்பட்டி, சோழவந்தானில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு - விவசாயிகளுக்கு கிடைக்கும் பலனை தடுக்க முயற்சிப்போர் மீது நடவடிக்கை : அமைச்சர் பி.மூர்த்தி எச்சரிக்கை

செல்லம்பட்டி, சோழவந்தானில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு -  விவசாயிகளுக்கு கிடைக்கும் பலனை தடுக்க முயற்சிப்போர் மீது நடவடிக்கை :  அமைச்சர் பி.மூர்த்தி எச்சரிக்கை
Updated on
1 min read

நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு கிடைக்கும் பலனை தடுக்க முயற்சிப்போர் மீது நட வடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் காய்ச்சல் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் 3,894 பேருக்கு ரூ.2.31 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. மேலூர், திருப்பரங்குன்றத்தில் ரூ.76 லட்சம் மதிப்பிலான உதவிகள் 1082 பேருக்கு அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார். ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணை யர் எஸ்.விசாகன், எம்எல்ஏ. ஆ.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்று 1,500-லிருந்து 500-க்கும் கீழே குறைந்துள்ளது. அனைவரின் கூட்டு முயற்சியின் விளைவாக இந்த நிலையை எட்டியுள் ளோம்.

செல்லம்பட்டி, சோழவந்தான் பகுதிகளில் விளைந்துள்ள நெல்லை விவசாயிகளிடமிருந்து வாங்க கொள்முதல் நிலையங் களை அரசு திறந்துள்ளது. வியா பாரிகளிடம் உள்ள நெல்லை விற்க சிலர் முயற்சிக்கின்றனர். இதற்குப் பலன் கிடைக்காததால், தவறான செய்திகளைப் பரப்புகின்றனர்.

விவசாயிகளுக்குக் கிடைக்கும் பலனைத் தடுக்க முயற்சிப்போர் மீது காவல்துறை மூலம் நட வடிக்கை எடுக்க அதிகாரிகள் தயாராக உள்ளனர். கூடுதல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கவும் மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in