

அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப் படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கை களையும் தமிழக அரசு நிறை வேற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்கு வரத்துக் கழகங்களில் பணியாற்றி 2020 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதிய பணப்பலன்கள் வழங்கும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 2-ம் தேதி தொடங்கிவைத்தார்.
அதன்படி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 3 மாவட் டங்களை உள்ளடக்கிய அரசுப் போக்குவரத்துக் கழக திருச்சி மண்டலத்தில் மொத்தம் 143 பேர் பயனடைந்துள்ளனர். இவர் களுக்கு ரூ.31 கோடி அவரவர் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ள அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர் சங்கத்தினர், தங்களது பிற கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
இதுதொடர்பாக டிஎன்எஸ்டிசி ஓய்வு பெற்ற தொழிலாளர் மற்றும் பென்சனர் நலச் சங்க செயலாளர் கே.மருதமுத்து, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்கிறோம். மேலும், எங் களது நீண்ட கால கோரிக் கையான அகவிலைப் படியை 2016 ஜனவரி முதல் 148 சதவீதம் வரை உயர்த்தி வழங்க வேண்டும். 2016-ல் நிறுத்தப்பட்ட சேம நல நிதியை அரசு மீண்டும் வழங்க வேண்டும்.
பணியின்போது உயிரி ழக்கும் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்றார்.