

பெரம்பலூர்: வன்னியர் சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கும் உத்தரவை அமல்படுத்தாத தமிழக அரசைக் கண்டித்து பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் வன்னியர் சமூகத்தினர் நேற்று பலர் தங்களது வீடுகளின் முன்பு கருப்புக் கொடியேந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம், வேப்பூர், கல்லை, பரவாய், ஆண்டி குரும்பலூர், வைத்தியநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி வன்னிய சமூகத்தினர் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.