

தூத்துக்குடியில் ஏழை, எளிய மக்கள் மருத்துவ தேவைக்கு பயன்படுத்தும் வகையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக6 ஆட்டோ ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவைதொடக்க நிகழ்ச்சி தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்புபகுதியில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநகரத் தலைவர் அப்துல்கனி தலைமை வகித்தார். மாநகரச்செயலாளர் சம்சுதீன், பொருளாளர் மெட்ரோ ஷேக், துணைச் செயலாளர்கள் சுலைமான், முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தலைவர் ஏ.யூசுப், மாவட்ட தொண்டரணி செயலாளர் தாரிக், இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை மாவட்ட செயலாளர் அபுல்ஹசன், மருத்துவ சேவை அணிமாவட்ட செயலாளர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர். மொத்தம் 6 ஆட்டோக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவை செய்வதற்காக இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டோக்களில் மினி ஆக்சிஜன் சிலிண்டர் வசதி இருக்கும். ஆம்புலன்ஸ் ஆட்டோ வசதியை பெற அண்ணாநகர் பகுதி மக்கள் 9952344782, திரேஸ்புரம் பகுதி மக்கள் 9003697630, ஜாஹிர் உசேன்நகர் பகுதி மக்கள் 8870283133, ஜெயிலானி தெரு மக்கள் 9443371393, சண்முகபுரம் பகுதி மக்கள் 9894369630 மற்றும் அரசு மருத்துவமனை பகுதிக்கு 9994160650 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தமுமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.