கரோனா தடுப்பு பணியில் அரசுடன் இணைந்து செயல்பட - தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் : திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தகவல்

கரோனா தடுப்பு பணியில் அரசுடன் இணைந்து செயல்பட  -  தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் :  திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தகவல்
Updated on
1 min read

கரோனா தடுப்புப்பணிகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசுடன் இணைந்து செயல்பட விரும்பினால் விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழகத்தில் கரோனா 2-வது அலை பரவலை தடுக்கும் வகையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசுடன் ஒருங் கிணைந்து செயல்பட தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதற்காக, ஒவ்வொரு மாவட் டத்திலும் ஒருங்கிணைப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருப்பத் தூர் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழுவில் தலைவராக மாவட்ட ஆட்சித் தலைவரும், உறுப்பினர்களாக மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், எஸ்ஆர்டிபிஎஸ் தொண்டு நிறுவனத்தலைவர், சரணாலயம் தொண்டு நிறுவனத் தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, மாவட்ட ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத் தலைவர் களுடனான ஆலோசனைக்கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், திருப்பத்தூர் மாவட்டத்தில் தன்னலம் கருதாமல் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மாவட்ட சமூக நல அலுவலருடன் இணைந்து கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, விருப்பமுள்ளவர்கள் https://ucc.uhcitp.in/ngoregistration என்ற இணையதளம் வாயிலாக தங்களை ஈடுபடுத்திக் கொள்ள லாம். கூடுதல் தகவல் பெற விரும்புவோர் திருப்பத்தூர் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினராக உள்ள மாவட்ட சமூக நல அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

மாநில மின்னஞ்சல் முகவரி யான tnngocoordination@gmail.com அல்லது மாவட்ட மின்னஞ்சல் முகவரியான tnvlrdswo@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். மேலும், தகவல் களுக்கு 78249-28598 என்ற தொலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ள லாம்’’ என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in