சிவகங்கையில் எரிவாயு தகன மேடை பழுது :

சிவகங்கையில் எரிவாயு தகன மேடை பழுது :
Updated on
1 min read

சிவகங்கை அரசு மருத்துவ மனையில் கரோனா பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் உயிரிழப்போரின் உடல்கள், அருகிலுள்ள நகராட்சி எரிவாயு தகன மேடையில் எரியூட்டப் படுகின்றன. இந்நிலை யில் எரிவாயு தகன மேடையில் தற்போது பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 நாட்களாக இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய முடியவில்லை.

இதுகுறித்து நகராட்சி அதி காரி ஒருவர் கூறுகையில், தகன மேடையில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்க சென்னையில் இருந்து பொறியாளர்களை வரவழைத்துள்ளோம்.

ஓரிரு நாட்களில் பழுது சரிசெய்யப்படும். அதுவரை பிரேத ங்களைப் புதைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதோடு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள வடக்கு மயானத்தில் உடல் களை தகனம் செய்ய ஏற்பாடு செய்துள்ளோம் என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in