குலவணிகர்புரம் ரயில்வே கேட் பராமரிப்பு :

பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ரயில்வே கேட் பராமரிப்பு பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது. படம்: மு.லெட்சுமிஅருண்
பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ரயில்வே கேட் பராமரிப்பு பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது. படம்: மு.லெட்சுமிஅருண்
Updated on
1 min read

பாளையங்கோட்டை குலவணிகர் புரம் ரயில்வே கேட் பராமரிப்பு பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது.

திருநெல்வேலியில் திருவனந்த புரம் செல்லும் சாலையில் குலவணிகர்புரம் ரயில்வே கேட் முக்கியமான பகுதி. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங் கள் கடந்து செல்லும் பகுதி இது. தற்போது, ஊரடங்கால் இவ்வழி யாக வாகன போக்குவரத்து குறைந்திருக்கிறது. மேலும் திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர், தூத்துக்குடிக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில்களும் ரத்து செய்யப் பட்டுள்ள தால் இந்த ரயில்வே கேட்டில் பராமரிப்பு பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. கடந்த 1-ம் தேதி இப்பணிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பணியாளர்கள் சிலருக்கு கரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டதால் பணிகள் நடைபெறவில்லை.

ரயில்வே கேட், தண்டவாளம், அதிலுள்ள சாலை ஆகியவற்றை பராமரிப்பு செய்யும் பணிகள் நேற்று நடைபெற்றது.

அவ்வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. இதுபற்றிய முன்னறிவிப்பு ஏதுமில்லாததால், அவ்வழியாக வந்த அத்தியாவசிய வாகனங்கள் குலவணிகர்புரம் வரை வந்து, பின்னர் பெருமாள்புரம் வழியாக திரும்பிச் சென்றன. குறிப்பாக, ஆம்புலன்ஸ்கள் பெரிதும் தவிப்புக்கு ஆளாகின.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in