

விழுப்புரம் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை 70 இடங்களில் கரோனா (கோவிஷீல்டு) தடுப்பூசி போடப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1.23 லட்சம்பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக 18 வயது முதல் 44 வயதுக்குட் பட்டவர்களுக்கு 179 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டுவந்தது. இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் தவணை, இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்வதில் சுணக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் நாளை (4-ம் தேதி) காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை விழுப்புரம் மாவட்டத்தில் 70 இடங்களில் 6,800 பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதில் முதல் தவணை, இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்படுகிறது.
அதன்படி ஒலக்கூர், ஆவணிப்பூர், சாரம், தாதாபுரம், வெள்ளிமேடுபேட்டை, முருக்கேரி, அனுமந்தை, பிரம்மதேசம், ஓமந்தூர், எண்டியூர், பெருமுக்கல், கிளியனூர், குன்னம், உப்புவேலூர், பொம்பூர், கோட்டகுப்பம், மயிலம், முப்புளி, நெடிமொழியனூர், பெரியதச்சூர், ரெட்டணை, மண்ணம்பூண்டி, செண்டூர், மேல்சித்தாமூர், மேல் ஒலக்கூர், திருவம்பட்டு, கீழ்மாம்பட்டு, வளத்தி, மேல்செவலாம்பாடி, அவலூர்பேட்டை, சத்தியமங்கலம், ஒட்டம்பட்டு, அனந்தபுரம், கெங்கவரம், நல்லாண் பிள்ளைபெற்றாள், ராதாபுரம், வேம்பி, தும்பூர், எண்ணாயிரம், கெடார், காணை, அன்னியூர், கருவாட்சி, கண்டமானடி, கோலியனூர், தோகைப்பாடி, அரசமங்கலம், சிறுவந்தாடு, கண்டமங்கலம், பி எஸ் பாளையம்,கோண்டூர், ராம்பாக்கம், இருவேல்பட்டு, பாவந்தூர், சிறுமதுரை, தி எடையார், திருவெண்ணைநல்லூர், முகையூர், கண்டாச்சிபுரம், வீரபாண்டி, ஆற்காடு மற்றும் விழுப்புரம், திண்டிவனம் நகராட்சிமருத்துவமனை, கீழ்பெரும் பாக்கம் ஆகிய 70 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி போடப் படுகிறது என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.