ஆத்தூர் குளம் சீரமைப்பு பணிகள் நாளை தொடக்கம் : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்

ஆத்தூர் குளம் சீரமைப்பு பணிகள் நாளை தொடக்கம் :  அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் குளத்தை சீரமைக்கும் பணி நாளை தொடங்குகிறது.

இதுகுறித்து, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரான, தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:

வைகுண்டம் அணையில் தென்கால் மூலம் விவசாயத்துக்கு தண்ணீர்பெறும் முக்கிய குளங்களில் ஒன்றாக ஆத்தூர் குளம் உள்ளது.ஆத்தூர் பகுதி முழுவதும் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், வாழை, வெற்றிலை, தென்னை போன்ற பயிர்கள் செழிப்பதற்கும், கால்நடைகள் பராமரிப்பதற்கும், நிலத்தடிநீர் பெருகுவதற்கும் ஆத்தூர் குளத்தில் தண்ணீர் தேங்கி இருப்பது மிகவும் அவசியம்.ஆத்தூர் குளத்தில் உள்ள முட்புதர்களை அப்புறப்படுத்தி, கரையை உயர்த்தி பலப்படுத்த வேண்டும் என, இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இக்கோரிக்கையை ஏற்று கனிமொழி எம்.பி.யின் முயற்சியால், கரையை உயர்த்தி பலப்படுத்தும் பணி நடைபெறவுள்ளது. நாளை (4-ம்தேதி) மாலை 4 மணிக்கு இப்பணியை, கனிமொழி எம்.பி, அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in