

திருச்சி துப்பாக்கித் தொழிற் சாலை (ஓ.எப்.டி) நிர்வாகம் தனது சமூக பங்களிப்பு நிதி (சி.எஸ்.ஆர்) மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு 20 சக்கர நாற்காலிகளை கடந்த மே 12-ம் தேதி வழங்கியது. அதைத்தொடர்ந்து அரசு மருத்துவமனையில் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த 10 படுக்கைகள், 20 ஸ்ட்ரெச்சர்கள், 15 சக்கர நாற்காலிகள், உணவு கொண்டு செல்லும் 5 ட்ராலிகள் துப்பாக்கித் தொழிற்சாலை சார் பில் இலவசமாக சீரமைத்துக் கொடுக்கப்பட்டன.
இந்நிலையில், துப்பாக்கித் தொழிற்சாலை பணியாளர்கள் அளித்த ரூ.2.5 லட்சத்தில் வாங்கப்பட்ட 20 ஸ்ட்ரெச்சர்களை அரசு மருத்துவமனை டீன் வனிதாவிடம் துப்பாக்கித் தொழிற்சாலை பாதுகாப்பு அலுவலர் லெப்டினன்ட் கர்னல் கார்த்திகேஷ் நேற்று முன்தினம் வழங்கினார்.
அப்போது துப்பாக்கித் தொழிற் சாலை தீயணைப்பு அலுவலர் பாலாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.