

தூத்துக்குடி அருகேயுள்ள தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த பெண்ணின் செல்போனுக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச படங்கள் புதிய எண்ணில் இருந்து வந்தன. மிரட்டல் விடுத்து குறுஞ்செய்திகளும் அதே எண்ணில் இருந்து வந்தன. அந்த பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தார். உரிய நடவடிக்கை எடுக்க சைபர் குற்றப்பிரிவு ஏடிஎஸ்பி இளங்கோவனுக்கு எஸ்பி உத்தரவிட்டார். சைபர் குற்றப்பிரிவு ஆய்வாளர் ஆல்வின் பிர்ஜித் மேரி தலைமையில் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். ஆபாச படம் மற்றும் மிரட்டல் குறுஞ்செய்திகளை அனுப்பியது, தூத்துக்குடி நாட்டுக்கோட்டை செட்டித் தெருவைச் சேர்ந்த ஆனந்தராஜ் (32) என்பது தெரியவந்தது. அவர் கைது செய்யப்பட்டார்.