சலுகை கட்டணத்தில் ஆம்புலன்ஸ் சேவை :

சலுகை கட்டணத்தில் ஆம்புலன்ஸ் சேவை :
Updated on
1 min read

கரோனோ தொற்றாளர்களுக்கு உதவும் நோக்கில், திருப்பூரில் சலுகை கட்டணத்தில் ஆம்புலன்ஸ்சேவை நேற்று தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்ப் பண்பாட்டு மையம் திருப்பூர், அரிமா சங்கம் ஆகியவை இணைந்து ‘அறம்’ என்ற அமைப்பை தொடங்கியுள்ளனர். இயலாதவர்கள், இயன்றவர் களுக்கு ஏற்ப சலுகை, நியாயமான கட்டணம் என்பதை அடிப்படையாகக் கொண்டு தமுமுக மருத்துவஅணி, தவ்ஹீத் ஜமாஅத், அரிமா சங்கம், ரோட்டரி சங்கம், தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

வென்டிலேட்டர், ஐசியு, ஆக்சிஜன்வசதிகள் கொண்ட 50-க்கும்மேற்பட்டஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கத்தை. திருப்பூர் தெற்குதொகுதி எம்.எல்.ஏ. க.செல்வராஜ் தொடங்கி வைத்தார். இந்த சேவையை பெற 9159116116 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in