

காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,111 கனஅடியாக குறைந்தது.
காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த கோடை மழை காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இருந்தது. தற்போது, மழை குறைந்ததை தொடர்ந்து கடந்த சில நாட்களாக அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.
அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 1,748 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 1,111 கனஅடியாக குறைந்தது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 97.41அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 97.33 அடியாக குறைந்தது.