

தூத்துக்குடி விமான நிலையத் தில் 2 விமான நிறுவனங்கள் மூலம் விமான சேவை அளிக்கப் பட்டது.
தூத்துக்குடி- சென்னை இடையே தினமும் 5 விமான சேவைகள் நடைபெற்றன.
ஊரடங்கால் தற்போது விமான பயணிகள் போக்குவரத்து குறைந்துள்ளது. இதனால் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினமும் ஒரு விமானம் மட்டும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒருநாள் காலையிலும், அடுத்த நாள் மாலையிலும் என, தினமும் ஒரு விமானம் மட்டும் இயக்கப்படுகிறது. நேற்று காலையில் மட்டும் விமானம் இயக்கப்பட்டது. இதில் 25 பயணிகள் வந்தனர்.