சேத்தியாத்தோப்பில் உலக புகையிலை எதிர்ப்பு உறுதியேற்பு :
உலகெங்கும் புகையிலை எதிர்ப்பு தினமாக மே 31-ம்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி புகை யிலையினால் ஏற்படும் தீமைகள், அதனால் உருவாகும் உடல்நலக் கோளாறுகள் போன்றவற்றை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி சேத்தியாதோப்பில் நேற்று நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சிவக்குமார் தலைமை தாங்கினார். சேத்தியாத்தோப்பு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் லலிதா, ராமலிங்கம், பகுதி சுகாதார செவிலியர் சுவர்ணா, சுகாதார ஆய்வாளர் செல்வம், கிராம சுகாதார செவிலியர் தரணி மற்றும் டெங்கு காய்ச்சல் பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டபலரும் 'புகையிலை பொருட்களை பயன்படுத்த மாட்டோம், புகையிலை பொருட்களை பயன்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்', 'புகையிலை பயன்படுத்துவது உடல் நலத்திற்கு தீங்கானது' என உறுதிமொழி ஏற்றனர்.
