இணையவழியில் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் கருத்தரங்கம் :
திருச்சி சந்தானம் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி (சிபிஎஸ்இ) சார்பில் ஒருங்கிணைந்த பண்ணை வளர்ச்சி குறித்த சுற்றுச்சூழல் பயணம் என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
கருத்தரங்குக்கு பள்ளிச் செயலாளர் கோ. மீனா தலைமை வகித்தார். பள்ளித் தலைமை செயல் அலுவலர் கு.சந்திரசேகரன், இயக்குநர் அபர்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக குளோபல் நேச்சர் பவுண்டேஷன் நிறுவனர் நவீன் கிருஷ்ணன் பங்கேற்றுப் பேசும்போது, தனது பண்ணையில் வளர்க்கப்படும் ஒட்டகம், மயில்கள், ஈமு கோழிகள், 9 வகையான நாய்கள், கிளிகள், மலை ஆடு, பங்களா வாத்து, உடும்புகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் குறித்தும், தனது பண்ணையில் உள்ள மரங்கள் குறித்தும் ஒளி-ஒலி வாயிலாக காட்டி அதன் சிறப்பியல்புகள் குறித்து விளக்கினார்.
இந்த கருத்தரங்கில் ஜெயேந்திரா மெட்ரிக் பள்ளி, சங்கரா மெட்ரிக் பள்ளி மற்றும் சந்தானம் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
முன்னதாக பள்ளி முதல்வர் பொற்செல்வி வரவேற்றார். நிறைவாக அறிவியல் ஆசிரியர் ராமமூர்த்தி நம்பி நன்றி கூறினார்.
