கடலூரில் காவல் துறையினருக்கு கரோனா வார்டு திறப்பு : அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்

கடலூர் காவலர் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா வார்டை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் திறந்து வைத்து பார்வையிட்டார்.
கடலூர் காவலர் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா வார்டை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் திறந்து வைத்து பார்வையிட்டார்.
Updated on
1 min read

கடலூரில் காவல்துறையினர் கரோனா சிகிச்சை பெற புதிய வார்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

கடலூர் மாவட்டத்தில் கரோனா நோய் தாக்கத்தினால் காவலர்கள், காவலர்களின் குடும்பத்தார்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற மற்றும் ஆக்சிஜன் படுக்கை பெறுவதில் சிரமம் இருந்து வந்தது. இதனை அறிந்த எஸ்பி அபிநவ் தனியார் நிறுவனங்கள் உதவியுடன் 100 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் அமைக்க தீர்மானித்துள்ளார். முதல்கட்டமாக கடலூர் காவலர் மருத்துவமனையில் ஆக்சிஜனுடன் கூடிய 18 படுக்கை வசதிகள் கொண்ட புதிய கரோனா வார்டு அமைக்கப்பட்டது. இதனை நேற்றுமுன்தினம் மாலை வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

காவல்துறை சார்பில் அமைக்கப்பட்ட கரோனா வார்டில் காவலர்கள், காவலர்களின் குடும்பத்தார் மற்றும் முன் களப்பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று எஸ்பிஅபிநவ் தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், இணை இயக்குநர் (நலப்பணிகள்) டாக்டர் ரமேஷ்பாபு, சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் செந்தில் குமார், கடலூர் கோட்டாச்சியர் ஜெகதீஸ்வரன், காவலர் மருத்துவமனை டாக்டர் சாரா செலின்பால், கடலூர் டிஎஸ்பி சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in