ராமநாதபுரம் மாவட்டத்தில் : குண்டர் சட்டத்தில் 7 பேர் கைது :

ராமநாதபுரம் மாவட்டத்தில் : குண்டர் சட்டத்தில் 7 பேர் கைது :
Updated on
1 min read

இந்நிலையில், கணேசமூர்த்தி, தினேஷ், விஜய், மணிமாறன், கார்த்திக், திருஞானம் ஆகிய 6 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக், ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பரிந்துரை செய்தார். ஆட்சியரின் உத்தரவையடுத்து கணேசமூர்த்தி உள்ளிட்ட 6 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதேபோல், கமுதி அருகே ஒச்சத்தேவன்கோட்டையைச் சேர்ந்த வேலாயுதம் மகன் சண்முகநாதன் மீது அடிதடி, கொலை முயற்சி, கஞ்சா விற்பனை உட்பட 12 வழக்குகள் நிலுவையில் உள்ளன. எஸ்.பி. பரிந்துரையின் பேரில் சண்முகநாதனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் சண்முகநாதனை போலீஸார் குண்டர் சட்டத்தில் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in