

கிருஷ்ணகிரி அருகே தென் பெண்ணை ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி பள்ளி மாணவர் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி அடுத்த செம்படம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி முருகன் (40). இவரது மகன் லோகநாதன் (16). இவர் மாதேப்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று நண்பர்களுடன் செம்படம்புதூர் பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் குளிக்கச் சென்றார்.
அப்போது, எதிர்பாராத விதமாக லோகநாதன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு சென்ற கிருஷ்ணகிரி தாலுகா போலீஸார், லோகநாதனின் உடலை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.