

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கண் மாயில் இருந்த மரக்கன்றுகளை வெட்டி சேதப்படுத்தியவர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கண்டியாநத்தம் இடையன் கண்மாயில் 1,000 கருவேல மரக்கன்றுகள் நடப்பட்டு, ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வந்தன. இதில், 100-க்கும் மேற்பட்ட மரக் கன்றுகள் வெட்டி சேதப் படுத்தப்பட்டுள்ளது நேற்று தெரி யவந்தது.
இதுகுறித்து ஊராட்சி நிர் வாகம் அளித்த புகாரின்பேரில், பொன்னமராவதி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.