சாராயம் காய்ச்சிய 43 பேர் கைது :

சாராயம் காய்ச்சிய 43 பேர் கைது :
Updated on
1 min read

கரோனா தடுப்பு பணிக்காக முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து, பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

இவ்வாறு சாராயம் காய்ச்சியதாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 43 பேர் கைது செய்யப்பட்டனர்.மேலும், இவர்களிடம் இருந்து 15 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் மற்றும் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் கூறியது: சாராய ஊறலில் விஷப் பூச்சிகள் விழுந்தாலோ, கலவையின் தன்மை மாறினாலோ விஷமாகி உயிரிழக்கும் சூழல் ஏற்படும். மேலும், சாராய ஊறல் போடுவதற்கு இடத்தை கொடுக் கும் விவசாயிகள் மீதும் நட வடிக்கை எடுக்கப்படும். சாராய ஊறல் போடுவது, சாராயம் காய்ச்சுவது போன்ற செயலில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in