

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் அருகே அபூர்வ வகை நீர் நாய் இறப்புக்கு காரணமான 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
எஸ்.புதூர் அருகே நெடுவயல் கிராமத்தில் தட்டான் கண்மாயில் இளைஞர்கள் சிலர் கயிறு மூலம் அபூர்வ வகை நீர்நாய் ஒன்றை பிடித்தனர். பலத்த காயமடைந்த அந்த நீர்நாயை வனத்துறையினரிடம் அவர்கள் ஒப்படைத்தனர். ஆனால், முதலுதவி சிகிச்சை அளித்தும் சில நிமிடத்தில் நீர்நாய் இறந்தது. இதையடுத்து நீர்நாய் இறப்புக்கு காரணமான, அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜன் (28), சின்னராசு (26) ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர்.