

காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,748 கனஅடியாக அதிகரித்துள்ளது.
வெப்பச்சலனம் காரண மாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் இரு தினங்க ளுக்கு முன்னர் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 1,447 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 1,748 கனஅடியாக அதிகரித்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 2,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 97.52 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 97.48 அடியானது. நீர் இருப்பு 61.62 டிஎம்சி-யாக உள்ளது.