

திருச்சி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் கைலாஷ் நகர் பகுதியில் பால், தயிர் விற்பனை நிலையம் ஒன்று உள்ளது. இங்கு ஊரடங்கு விதிகளை மீறி மளிகைப் பொருட்களையும் விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து திருவெறும்பூர் போலீஸார் நேற்று முன்தினம் அங்கு சென்று ஆய்வு செய்தனர். இதில் மளிகைப் பொருட்களை சிலவற்றையும் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக கடையின் உரிமையாளர் செந்தில்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருவெறும்பூர் வட்ட வருவாய் ஆய்வாளர் கீதா, இந்த கடையை பூட்டி சீல் வைத்தார்.