

திருச்சி மாவட்டம் ஜம்புநாதபுரம் காவல் நிலையத்தில், வழக்கு ஒன்றில் பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர் நிறுத்தப்பட்டிருந்தது. இதில் இருந்த இன்ஜின் குழாய் (வால்வ்) கடந்த சில தினங்களுக்கு முன் திருடு போனது. இதுதொடர்பாக ஜம்புநாதபுரம் போலீஸார் விசாரித்து வந்தனர்.
அப்போது தாத்தையங்கார்பேட்டை அருகேயுள்ள பேரூரைச் சேர்ந்த காரழகன் மகன் சுந்தரவேல்(25), அவரது நண்பரான கண்ணனூரைச் சேர்ந்த பிரபாகரன்(24) ஆகியோர் சேர்ந்து டிராக்டரின் இன்ஜின் குழாயை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் நேற்று முன்தினம் போலீஸார் கைது செய்தனர்.