வாகன சோதனைச் சாவடிகளில் நெல்லை எஸ்.பி. ஆய்வு :

திருநெல்வேலி மாவட்டத்தில் வாகன சோதனைச் சாவடிகளில் காவல்துறை கண்காணிப்பாளர் நெ. மணிவண்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் வாகன சோதனைச் சாவடிகளில் காவல்துறை கண்காணிப்பாளர் நெ. மணிவண்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் வாகன சோதனைச் சாவடிகளில் காவல்துறை கண்காணிப்பாளர் நெ. மணிவண்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

கரோனா பரவலை கட்டுப்படுத்த முழுஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் முக்கிய சாலைகளில் போலீஸார் சோதனைச் சாவடிகள் அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சோதனைச் சாவடிகளில் மாவட்ட எஸ்பி மணிவண்ணன் ஆய்வு செய்தார். கிருஷ்ணாபுரம், கங்கைகொண்டான் வாகன சோதனைச் சாவடிகளில் ஆய்வு மேற்கொண்ட அவர், தேவையின்றி வாகனங்களில் சுற்றித்திரிவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். முகக்கவசம், கையுறைகள் அணிந்து பாதுகாப்பாக பணியில் ஈடுபடுமாறும் அறிவுறுத்தினார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் விதிகளை மீறி வாகனத்தில் சுற்றித்திரிந்த 39 பேர் மீது வழக்கு பதிவு செய்து 42 வாகனங்கள் பறிமுதல செய்யப்பட்டுள்ளன. பொது இடங்களில் முகக்கவசம் அணியாத 272 பேருக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாத 9 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in