

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் பனீந்திர ரெட்டி ஆலோசனை நடத்தினார்.
அவர் பேசும்போது, “ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டும். அரசுமற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். குறிப்பாக மில் தொழிலாளர்கள், தீப்பெட்டி தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்று பவர்களுக்கு தடுப்பூசிகளை விரைந்து போட வேண்டும்.
வீட்டுத் தனிமையில் உள்ள கரோனா தொற்று உள்ளவர்களை, அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவாமல் கண்காணிக்க வேண்டும். சித்த மருத்துவ சிகிச்சை கரோனா பாதுகாப்பு மையத்தில் 30 சதவீதம் பேர் உள்ளனர். அரசு மருத்துவமனைகளில் தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளதை உறுதி செய்துகொள்ள வேண்டும்” என்றார். முன்னதாக ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா கட்டளை மையத்தை ஆய்வு செய்தார். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கி.செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் சரண்யா அறி, சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் கலோன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை யின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.