திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்காக - குறுகிய கால மருத்துவ பயிற்சியில் சேர வாய்ப்பு :

திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்காக  -  குறுகிய கால மருத்துவ பயிற்சியில் சேர வாய்ப்பு :
Updated on
1 min read

திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் குறுகிய கால மருத்துவப் பயிற்சி யில் சேர விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தால் 6 பிரிவுகளில் குறுகிய காலத்தில் மருத்துவப் பணியாளர்களை தயார் செய்யும் பயிற்சி அளிக்கப் படவுள்ளது.

பிளேபோடோமிஸ்ட், எமர்ஜென்சி மெடிக்கல் டெக்னீஷியன் ஆகிய பிரிவு களுக்கு பிளஸ் 2 கல்வித் தகுதியும், ஜெனரல் டியூட்டி அசிஸ்டென்ட் பிரிவுக்கு 8 மற்றும் 10-ம் வகுப்பு கல்வித்தகுதியும், ஹோம் ஹெல்த் எய்ட் மற்றும் ஜெனரல் டியூட்டி அசிஸ்டென்ட் ஆகிய பிரிவுகளுக்கு பத்தாம் வகுப்பு தகுதியும், மெடிக்கல் எக்யூப்மென்ட் டெக்னாலஜி அசிஸ்டென்ட் பிரிவுக்கு ஐடிஐ மற்றும் 3 ஆண்டு அனுபவம் அல்லது டிப்ளமோ படிப்பில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பிரிவுகளில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் திறன் சான்றிதழ்

பயிற்சி பெற விரும்புவோர் தங்களின் கல்வித்தகுதி மற்றும் சுயவிவரங்களை ஓசூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை 63836-43562 அல்லது 70220-45795 அல்லது 86101-50766 அல்லது 81100-51765 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், தகுதியுள்ளவர்கள் https://forms.gle/JRNro3cep5WJ2Amc7. என்ற கூகுள் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in