நூறு நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு சம்பளம் நிலுவை என புகார் :

நூறு நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு சம்பளம் நிலுவை என புகார் :
Updated on
1 min read

கரோனா பொது முடக்க காலத்தில், நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் சிலருக்கு, இரண்டு மாதங்களாக சம்பளம் தரப்படவில்லை எனக் கூறி, முதல்வரின் தனிப்பிரிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்லடம் ஒன்றியச் செயலாளர்ஆர்.பரமசிவம் புகார் அனுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வரின் தனிப் பிரிவுக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் ‘‘திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றியம் பூமலூர் ஊராட்சியில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் மூன்று பணித்தளங்களில் வேலை செய்யும் தொழிலாளர் களுக்கு மார்ச், ஏப்ரல் மாதம் வேலை செய்ததற்கு உரிய சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. தற்போது வருகைப் பதிவு சமூகரீதியாக எடுப்பதாக உள்ளது.

மேலும் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பணியாளர்களுக்கு, இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.

இதனால் அவர்களின் குடும்பத் தினர் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே நூறுநாள் வேலை திட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.’’ என்று குறிப்பிட்டுள் ளார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in