

திருச்சி அரசு மருத்துவமனை கரோனா பிரிவுக்கு தேவையான உபகரணங்களை திருச்சி துப்பாக் கித் தொழிற்சாலை (ஓ.எப்.டி) நிர்வாகம் தனது சமூக பங்களிப்பு நிதி (சி.எஸ்.ஆர்) மூலம் வழங்க முடிவு செய்துள்ளது.
அதன்படி, அரசு மருத்துவமனைக்கு 20 சக்கர நாற்காலிகள் கடந்த மே 12-ம் தேதி வழங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து அரசு மருத்துவமனையில் பயன்படுத்த முடியாத நிலையில் கிடந்த படுக்கைகள், ஸ்ட்ரெச்சர்கள், சக்கர நாற் காலிகள், உணவு கொண்டும் செல்லும் ட்ராலிகள் உள்ளிட்ட தளவாடப் பொருட்களை கேட்டுப் பெற்று, அவற்றை சீரமைக்கும் பணிகள் துப்பாக்கித் தொழிற்சாலை வளாகத்தில் கடந்த 2 வாரங்களாக மேற்கொள்ளப்பட்டன.
இதையடுத்து, புதுப்பிக்கப்பட்ட 10 படுக்கைகள், 20 ஸ்ட்ரெச்சர்கள், 15 சக்கர நாற்காலிகள், 5 உணவு கொண்டு செல்லும் ட்ராலிகள் நேற்று முன்தினம் துப்பாக்கித் தொழிற்சாலையிலிருந்து லாரிகளில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
துப்பாக்கித் தொழிற்சாலை பொதுமேலாளர் சஞ்சய் திவேரி, தளவாடப் பொருட்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட நகுல் சைனி உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தார்.
மேலும் இப்பணிகள் குறித்து திட்டமிட்டு, ஒருங்கிணைத்த துப்பாக்கித் தொழிற்சாலை பாது காப்பு அலுவலர் லெப்டினன்ட் கர்னல் கார்த்திகேஷ், தொழிற்சாலையின் பணிக்குழு உறுப்பினர்கள் ஷக்காரியாஸ், னிவாசலு, பாலாஜி, விஜயகுமார், ரமேஷ் உள்ளிட்டோரையும் பாராட்டினார்.