

பெரம்பலூர் மாவட்டம் குன்னத் தில் புதுப்பிக்கப்பட்ட எம்எல்ஏ அலுவலகத்தை பிற்படுத்தப்பட் டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று திறந்து வைத்தார்.
அப்போது அவர் கூறியது: இந்த எம்எல்ஏ அலுவலகத்தில் பெறப்படும் மனுக்களை உடனுக்குடன் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட துறை அலு வலர்களுக்கு அனுப்பி நட வடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ எம்.பிரபாகரன், மாவட்ட ஊராட்சித் தலைவர் சி.ராஜேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.