ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு :
திருச்செந்தூர் சன்னதி தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியம் மகன் மூர்த்தி(43), ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை 7ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார்.
மூர்த்திக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. கரோனா முழு ஊரடங்கால் கடந்த 10-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டதையடுத்து போதைக்காக மூர்த்தி அடிக்கடி சோடாவில் சானிடைசர் கலந்து குடித்து வந்துள்ளார்.
நேற்று காலை சன்னதி தெருவில் உள்ள தனியார் நர்சரி பள்ளி பின்புறம் வைத்து சானிடைசர் குடித்துள்ளார். இதனால் அவருக்கு கண் பார்வை மங்கி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது அண்ணன் ஐயப்பனிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல உறவினர்கள் முயன்றனர். ஆனால் அதற்குள் மூர்த்தி உயிரிழந்து விட்டார்.
செங்கோட்டை பிரானூர் பார்டரைச் சேர்ந்த கருப்பசாமி மகன் சுந்தர்ராஜ்(45), லாரி ஓட்டுநர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. மனைவி சுதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் குடும்பத்தை விட்டு பிரிந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருச்செந்தூருக்கு வந்து யாசகம் பெற்று வாழ்ந்து வந்தார். நேற்று மதியம் டி.பி சாலையில் உள்ள பழைய மதுக்கடை முன்பு இறந்து கிடந்தார்.
