உயிரிப்பல்வகைமை குறித்து இணைய வழியில் - பாடல் எழுதுதல், நாட்டுப்புற பாடல் பாடுதல் போட்டி :

உயிரிப்பல்வகைமை குறித்து இணைய வழியில் -  பாடல் எழுதுதல், நாட்டுப்புற பாடல் பாடுதல் போட்டி :
Updated on
1 min read

சர்வதேச உயிரிப்பல்வகைமை தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, இணைய வழி பாடல் எழுதுதல் மற்றும் நாட்டுப்புற பாடல் பாடும் போட்டியில் பொதுமக்கள் அல்லது குழுவினர் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

சர்வதேச உயிரிப்பல்வகைமை தினத்தின் கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழகத்தை சேர்ந்த தனிநபர் அல்லது குழுவினர் பங்கேற்கும் வகையில், இணைய வழி பாடல் எழுதுதல் மற்றும் நாட்டுப்புற பாடல் பாடும் போட்டி நடத்தப்படுகிறது. மக்களின் வாழ்வில், உயிரிப்பல்வகைமை குறித்த பாடல் வரிகள் எழுதும் போட்டி, உயிரிப்பல்வகைமையை கருப்பொருளாகக் கொண்டு பாரம்பரிய நாட்டுப்புறப் பாடல் பாடுதல் என இரு பிரிவுகளில் போட்டி நடத்தப்பட உள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த தனிநபர் அல்லது குழுவினர் இப்போட்டியில் பங்கேற்கலாம். வயது வரம்பு இல்லை. தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரியம், TBGP 2-வது தளம், நன்மங்கலம், மேடவாக்கம், சென்னை- 100. மின்னஞ்சல் secy.tnbb@gmail.com. மேலும் விவரங்களை, http://tnbb.tn.gov.in/images/pdf/IDBPoster2021.pdf என்ற இணையதளம் வாயிலாக அறியலாம். படைப்புகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 05.06.21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பரிசுத் தொகையாக முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-வது பரிசு ரூ.3 ஆயிரம், 3-வது பரிசு ரூ.2 ஆயிரம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in